Header Ads Widget

Responsive Advertisement

பொம்மலாட்டம்


கண்ணிரண்டும் கண்டதெல்லாம் சொந்தமுமில்லை,,,

கால்கள் சென்ற பாதையிலும் வஞ்சகமில்லை,,,,

தென்றல் வர தென்னையுமே அசைந்திட

வில்லை,,,

உன்னைத்

தேடி வந்த என்னிடத்தில் எதுவுமில்லை,,,,

கண்ணா!

கண்ணா!!

கண்ணா!!!


இறந்தவர்க்கும் வருந்தவில்லை நானடா கண்ணா,

அதை

இருப்பவனும்

தெரிந்து கொள்ள

ஆனேன்டா கண்ணா!

மறுப்பவர் முன் உறுதியாக மனத்தில் 

தோன்றி,

நீ,

மறுநாளில் காட்சி தந்தாய் ஏனடா கண்ணா!

கண்ணா!!

கண்ணா!!!


பொம்மலாட்டம், வாழ்வு என்று கனவில் வந்தாயோ?

இல்லை தெரிந்து கொள்ள என்னிடத்தில் 

சேதி சொன்னாயோ!

கண் திறந்த நேரத்திலே காணவில்லையே,,,

நான் காண்பதெல்லாம்

பொம்மலாட்டக் கனவுகள் 

தானா,,,

கண்ணா!

கண்ணா!!

கண்ணா!!!


துன்பத்திலும்

இன்பமொன்றை

கொடுத்து 

பாக்கிற,,,

மாலை கொடுக்க வந்த நாளையுந்தான் தள்ளிப்போடுற,,,

உன்னையன்றி யார் உறவை நினைத்திட்டேன் கண்ணா,,,,,,

நீ, 

உலக மென்றே

காலடியில்

கிடந்திட்டேன் கண்ணா!

கண்ணா!!

கண்ணா!!!


பொம்மலாட்டம் ஆடுகின்ற ஆட்டத்தைப் 

போல,,,

என்னை புரிய வைத்து ஒடுகின்றாய்

ஏனடா கண்ணா?

பிரிந்ததெல்லாம் நேரம் வர கூடத்தானடா,,,

உன்னைப் பிரியத்திலே பிடித்து விட்டேன்

காலைத்தானடா,,,

கண்ணா!

கண்ணா!!

கண்ணா!!!


பாலா