புதுமைப் பெண்ணிவள் சொல்லும் செயலும்
பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் வாழத்தான் ஆசை எங்களுக்கு
எத்துறையிலும் தடம் பதிக்கவும் ஆசை
சாதனை பதிக்கவும் ஆசை
ஆனால் எங்கள் தடத்தை பின்னால் யாரோ அழித்துக் கொண்டே வருகின்றார்கள்
நீரில் மூழ்கிய பந்து மேலே எழும்புவது போல் மீண்டும் மீண்டும் மேலே எழும்புவோம்
பூக்களை மறைத்து வைத்தாலும் வாசம் மறையாது
எங்களை ஒடுக்கி வைத்தாலும் எங்கள் திறமை வெளிவராமல் இருக்காது
நாங்கள் குட்ட குட்ட உயருவோம்
வெட்ட வெட்ட வளருவோம்
எங்கள் மனதில் தோன்றியதைச் சொல்வோம்
சொல்லியதைத்தான் செய்வோம்
எங்களால் மாற்றி பேசவும் முடியாது
மாறுவேஷம் போடவும் தெரியாது
மாற்றத்தை மாற்றவும் முடியாது
தி.பத்மாசினி