Header Ads Widget

Responsive Advertisement

தரம்

ஏழையாகத் தான் பிறந்திருப்பார் 

எனில் நல்லவருடனே சேர்ந்திருப்பார்

அவர் நடத்தையில் தரத்தினைக் காத்து நிற்பார்.


சாதி என்ற வெறிபிடித்து அலைந்து நிற்பார்

ஒரு சாதியை அசிங்கியமாகப் பேசிநிற்பார்

அதில் அவர் தரத்தினை உணர்த்தி நிற்பார்.


கேவலமானவருடன் சேர்ந்திருப்பார் 

அவர் கேவலமாகத்தான் பேசி நிற்பார்

அதில் தன் தரம்தனை காட்டி நிற்பார்.


தரம் கெட்ட செயல்களைச் செய்திருப்பார் 

அவரை மாதிரியாக நினைத்திருப்பார்

அவர் தரம் கெட்ட செயல் தான் செய்திருப்பார்.


அவரவர் செய்கைகள் சொல்லிடும் தரமதை

பலரது சொல்லது காட்டிடும் தரமதை

பலர்முன் சொல்லுதல் காட்டிடும் தரமதை.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி*