Header Ads Widget

Responsive Advertisement

இன்று மட்டுமா மகளிர்தினம்

ஆசைகளை சிறை வைத்து -அவள் அடுப்பறையில் வெந்து தனியும் நாளென்ன நாளோ!  


கருசுமந்து காலனை வென்று -அவள் வீடுதிரும்பும் 

நாளென்ன நாளோ ! 


திருமதி ஆனதலிருந்து ஒருமதியுமில்லாதவளென -அவளை 

மதியாருக்கும் மனம்கோணாமல் பணிசெய்யும் நாளென்ன நாளோ! 


வாழ்க்கைப்பட்டதிற்காய் 

வாழ்வெல்லாம் ஆசை துறந்து - அவள் 

அகதியாய் ஓரம் நின்ற நாளென்ன நாளோ !


ஆண்டுக்கொருநாள் கொண்டாடி ஆயுள் முழுவதும் அடிமையாய்-அவள் வாழ்வது நாளென்ன நாளோ!  

சபைகூடி, வசைபாடி சபித்துவிட்டு பாராட்டும்  நாளென்ன நாளோ ! 


போடுவது வேசம் என்று தெரிந்தும் *போராடாத் தயாராக இருக்கும் அவளுக்கு எல்லா நாளும் மகளிர் தினமே*


 *பெண்ணே*

நீ விதை !  விழும்போதெல்லாம் முளைத்தெழும் *விருட்சம் !*

 

நீ நதி தடைகளைத் தாண்டும் 

*வேகம் உன்னுள் !*


 நீ காற்று 

ஊடே புகுந்து ஒழுங்குபடுத்தும் *ஆக்கம் !*


நீ நெருப்பு வேண்டாதன பொசுக்கிடும் *வேள்வி !


மாதவம் செய்து மகளிராய் பிறந்த அனைவருக்கும்

*மகளிர் தின வாழ்த்துகள்*

           *-நாணல்*