தாயாய், தமக்கையாய், தங்கையாய், மனைவியாய்,அத்தையாய் சித்தியாய் மகளாய் பேத்தியாய் இருப்பவள் நானே என்கிறது பெண்மை.
உறவாய், நட்பாய், உணர்வாய், உயிராய்,
உறவின் நட்பாய், நட்பின் உறவாய்,
பெண்மையாய், உண்மையாய்,
பெண்மையில் உண்மையாய்
கண்ணாய் கருத்தாய் இருப்பவள் நானே.
நன்மையாய், தன்மையாய், மென்மையாய், வன்மையாய்,
மென்மையில் வன்மையாய்
வன்மையில் மென்மையாய்
நன்மையில் தன்மையாய் இருப்பவள் நானே.
கருணையாய், கனிவாய், கருணையில் கனிவாய்
காதலாய், அன்பாய், காதலில் அன்பாய்
கல்வியாய், ஞானமாய், கல்வியில் ஞானமாய்
பாசமாய், நேசமாய் இருப்பவள் நானே.
அழகாய், அறிவாய், சொல்லாய், பொருளாய்,
அழகில் அறிவாய், அறிவில் அழகாய்
விளக்காய், ஒளியாய், விளக்கில் ஒளியாய்
இசையாய், நாதமாய், ஒலியாய், வாழ்க்கையாய்,
வாழ்க்கையின் அர்த்தமாய்
இருப்பவள் நானே
என்றே நன்றாய் சொல்கிறது பெண்மை.
*அனைத்து மகளிர் குல மாணிக்கங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.*
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*