உயரத்தில் நீ இருக்க உன் அருமை தெரியலையே,,,,
தெருவிலே நானிருக்கேன் என்னைப் பார்த்து ஏங்குவதேன்,,,,
கடமையில் உன்னைப்போல் யாருண்டு,
காலத்தில் வெல்வதிலும்
உனக்குப் பேருண்டு,,,
உரிமைக்கு குரல் கொடுத்தாய் நீ நின்று,,,
அந்த நினைவுகளை மறப்பேனா நான் இன்று,,,,
இரவானால் என்னை வந்து பார்க்கின்றாய்,,,
மனதுக்குள் ஏதேதோ கேட்கின்றாய்,,,
உலகாளும் உனக்கு நிகர் நானேது,,,
அந்த உண்மை சொல்லி விடு மறவாது,,,
மேகங்கள் மறைத்தாலும் சோர்வுனக்கு
ஆகாது,
போர் தொடுக்கும்
உன் மனதும் என்னைப் பார்க்காமல் போகாது,,,,
நீ வளர நான் பார்க்க,
நில மகளும் வரவேற்க
தாமரையை காண்பது போல் தலை சாய்த்து போவதேன் வெண்ணிலவே,,,
தேன்மணக்கும் தமிழெடுத்து
தென்றலால் பூதொடுத்து,
வான் முழுக்கு வீசிடுவேன் வெண்ணிலவே,,,
உன் வட்ட முகம் காண்பதற்கே வெண்ணிலவே!
பாலா