கடல்முழுக்க கயல்கள் உண்டு
ஆனால்
உன்விழிகளில்
உள்ள அழகும் துள்ளலும்
எந்த கயலுக்குண்டு?
நிலவுக்குப் பதினாறு பிறைகளுண்டு!
ஆனால்
பெண்ணே உன்
நெற்றியைப் போல்
வசீகரம்
எந்த பிறைக்குண்டு!
பூக்கின்ற பூக்களிலே தேன்சுரக்கும்!
ஆனால்
கண்ணே உன் செவ்விதழில் ஊறுக்கன்ற தித்திப்பின் சுவை
எத்தேனுக்குண்டு?
பவளமென்றாலே
சிவப்புதான்!
ஆனால்
உன்உதடுகள் கொண்ட ஒளிவீசும்
சிவப்பு எப்பவளத்திற்குண்டு?
கோடிக்கணக்கிலே
விண்மீன்கள்
வான்முழுவதும்
கொட்டிக் கிடக்கிறது!
ஆனால்
உன் புன்னகையைப் போல பொலிவு எந்த விண்மீனுக்குண்டு?
எட்டாத தொலைவில்
வட்டநிலா காய்கிறது!
ஆனால்
கிட்டத்தில் ஒளிரும் உன்முகம் போல்
அழகு அதற்குண்டா?
ஆயிரம் இசைக்கருவிகள்
பூமியில் உண்டு!
ஆனாலும்
உன் பேச்சின் இன்பம் எந்த இசைக்கருவிக்கு உண்டு?
அன்னங்கள் அழிந்ததென்று வரலாறு சொல்கிறது!
ஆனால்
பெண்ணே உன் நடையைக் கண்டவர்கள் வரலாறு பொய்யென்று வாதிடுகிறார்கள்!
எத்தனையோ பெண்களை இறைவன் படைத்தான்!ஆனால்
உன்னைப் போல்
பேரழகு எப்பெண்ணுக்குண்டு?
த.ஹேமாவதி
கோளூர்