ஒவ்வொருரின் முகத்திற்குப் பின்னாலும்
எத்தனை எத்தனை முகங்கள்
ஒவ்வொன்றையும் விலக்கிப் பார்த்தால்
எத்தனை எத்தனை சலனங்கள்
இன்பமான முகம் இன்னிசைபாடும்
சோகமான முகம் முகாரி பாடும்
ஆணவக்காரரின் முகம் அன்பை இழக்கும்
போக்கிரியின் முகம் அமைதியை இழக்கும்
மழலையின் முகம் வாட்டம் போக்கும்
நல்லவர் முகம் நலத்தைக் கொடுக்கும்
பாவையின் முகம் நாணம் கொள்ளும்
ஆடவர் முகம் அச்சம் தவிர்க்கும்
ஞானியின் முகம் நல்லவற்றை போதிக்கும்
பால்வடியும் முகம் பரிதாபம் கொள்ளும்
அழகான முகம் மற்றவரை ஈர்க்கும்
லஷ்மி கடாட்சமான முகம் அருளைத் தரும்
இறைவனின் முகம் அவதாரம் எடுக்கும்
தி.பத்மாசினி