கருவறையில் பிறந்தோம்!
கல்லறையில்
முடிந்தோம்!
இடையில்
எத்தனை அறைகளில்
இருந்தோம் என்பது முக்கியமல்ல!
அவற்றுள் கழிவறையும் ஒன்றா?என்பதே முக்கியம்!
பிறர்பார்க்க பெருமையாய் மாடிமேலே மாடிகட்டி வாழு!
ஆனால் பிறர்பார்க்க திறந்தவெளியைக் கழிவறையாய்ப்
பயன்படுத்தித் தாழாதே!
வீட்டுக்கொரு மரம் வளர்த்தால்
மழைமிகுந்து வளம்பெருகும்!
வீட்டுக்கொரு கழிவறை கட்டிப் பயன்படுத்தினால்
நோய்கள் பரவாது!
நலங்கள் பெருகிடும்! திறந்தவெளிகளை
கழிவறையாய் நீ
பயன்படுத்தினால்
உன்னைச் சுற்றி
நான்கு சுவர்கள் இருக்காது!
மாறாக ஏளனமாய் நோக்கும் கண்களே சூழ்ந்திருக்கும்!
வெட்கத்திலும் கேலியிலும் உன்தேகத்தின் அன்றாடநிகழ்வு அமைய வேண்டுமா?அன்றி
யாருமே கவனிக்கமுடியாத வண்ணம்!
நான்கு சுவர்களுக்குள்
பாதுகாப்பாய்
நோய்களின் தாக்கம் தராமலும் ஏற்காமலும்
கௌரவமாய் உனது தேகத்தின் அன்றாட நிகழ்வு நடக்கவேண்டுமா?
முடிவுசெய் மனமே!
மனிதனின் மதிப்பை உணர்த்துவது கழிவறையே!
முறையாய் நீயும் கழிவறையைப் பயன்படுத்து!
நலமாய் வாழ்வில்
முன்னேறு!
தேசமெங்கும் அனைவரும் கழிவறையைப் பயன்படுத்தினால்
சுத்தமான பாரதம்
ஒளிவீசும் பாரு!
நோய்க்கிருமி பரவாத தேசத்தை உருவாக்கிட
இப்போதே நீயும்
கழிவறையைப் பயன்படுத்து!
தேகத்திற்கு இதயம் போல நலவாழ்வுகாகு கழிவறை முக்கியம்!
இதை அனைவரும் உணர்வது அவசியம்!
த.ஹேமாவதி
கோளூர்