Header Ads Widget

Responsive Advertisement

துறைதோறும் துலங்கும் தமிழ்



அறாஅ கழையோசை கோடா செம்பொன்தமிழி

மெய்விரை ததும்பி சயசய தமிழிபோற்றி

உறழ்தல் கெழுதல் புரையோர் தமிழி

ஆன்றோர் புகழ் மலைதல் தமிழி

2. நறவு தமிழி அழுங்கல்நீ்ர் போல

புகன்றல் விம்முதல் முரி யாண்டும்

கம்ப வள்ளுவ தேவலோகப் புகழ்யாண்டும்

விதிர்விதிர்த்து தீராத தமிழி யாண்டும்


3. அகிலப் புலவரெல்லாம் இறவா தமிழிர்

மறம், காதல் போற்றுவார் மலைத்தமிழிர்

கலவார் குழூஉம் ஓடுதல்ஆகா துப்புநீட்டி

தானையற்று செருபுரிந்து உலம்தேசும் தமிழிர்

4. குமரி மதுரையிற் சங்கமித்த வலன்தமிழி

தொல் ஐம்பெருங்காப்பிய அகம்புறம் ஈந்ததமிழி

உயிர்மெய் யெழுத்து அஃதே பூண்டதமிழ்

பௌவமித்து துப்புகுந்தம் சீர்த்தி வலம்தமிழி


5. இத்தகு மன்னுயிர்க்கு நறவு மலைத்தமிழி

எத்தகு விளிதல் அதர்மறாஅல் வீழ்தல்ஆகா

ஒன்னா வேற்று மொழி அமர்கொண்டு

இன்னா தேவமொழி இமிழ்தல் ஆகா.....