ஆளும் ஒசரமில்லை எனக்கேத்த ஜோடியில்லை,,,, தேனி, கம்பம் கூட உனக்குப் பக்கம்மா,,,
போடி, நானும் போகப் போறேன் போடிப் பக்கம்மா,,,,
தேடி வந்தவரே திரும்பி நீங்க போகலாமா?
போடி போனாலும்
தேடி நானும் வந்திருவேன்,
ஆடிப் போயி ஆவணினா பதினெட்டு மாசம்,,,
என்னை விட்டு ஓடிப்போனா ஊரே பேசும்,,,,
நீ,
என்னை விட்டு ஓடிப்போனா ஊரே பேசும்,,,,
காடு, பட்டி போனாலும் கந்தனுக்கு மலையிருக்கும்,,,
கோபத்தில
கூடு விட்டு போனாலும் குருவிக்கு இந்த குணமிருக்கும்,,,
போடி நானும், தனியாக போகத்தான் போறேன்,,,
வீரபாண்டி கோயிலிலே
ஆடத்தான் போறேன்,,,
நாடு கெட்டுப் போயி வருசம்
பல ஆச்சு
மச்சான்,,,
நாகரீகம் வளர வளர நாமும் வளரணும்,
நாம
சேர்ந்து வாழ எல்லோரும் பார்த்து ரசிக்கணும்,,,
கெட்டுப் போன நாட்டுலதான்
நாகரீகம் இருக்குமாடி ,
துட்டிருந்தா நாகரீகம் தன்னால கிடைக்குமடி
தட்டிக் கேட்க ஆளில்லாம
என்னை ஏய்க்கிற,,,
நான் தாமரை பட்டி கோடாங்கி என்ன பாக்குற?
கூறுகெட்ட மனு சாளு
ஏர்பூட்டணும் காலையிலே,,,
பேரு கெட்டு போகுமுன்னே போயிடனும் ஊருக்குள்ளே,,,
ஜனங்களெல்லாம் நம்மளத்தான் பார்த்து நிற்குது,,,
விடியச் சொல்லி சேவலுந்தான் கூவிப் பார்க்குது,,,
இருவரும் : ரெண்டு பட்டால் ஊருக்குள்ளே கொண்டாட்டமாம் கூத்தாடிக்கு,,,,
ரெண்டு ஊரும் வேணாம்னு எங்க ஊரு போகப் போறோம்,,,
தங்கமான குடும்பமாக வாழத்தான் போறோம்,,,,,
நாங்க தரணிக்கெல்லாம்
சோறு போட வேலை செய்யத்தான் போறோம்,,,,
பாலா