Header Ads Widget

Responsive Advertisement

அன்பு இல்லம்



மலரென்றால் தேன் இருக்க வேண்டும்!
மரமென்றால் அது
நிழல்தரவேண்டும்!
மனிதனென்றால்
மனதில் அன்புவேண்டும்!
அன்புள்ள மனிதரெல்லாம்
நடமாடும் அன்புஇல்லங்களே!
மாடமாளிகை கூடகோபுரம் ஆனாலும் அதிலே வாழும் மனிதரிடம்
அன்பில்லா விட்டால் அது வெறும் கட்டிடமே!
வாழும் மனிதரின்
மனதிலே பொங்கும்
அன்பிருந்தால்
குடிசைவீடும் ஆகிடும் கூடகோபுரமாய்!
தன்னைப் போலவே பிறரையும் கருதும் எண்ணம் தருவது
அன்பே ஆகும்!
கனியிடை ஊறிடும்
சுவையினை மீறிடும்
அன்பை மனமெங்கும்
விதைத்திடுவோம்!
உயிரற்ற கட்டிடங்களுக்கு
அன்பாலே உயிரூட்டுவோம்!

த.ஹேமாவதி
கோளூர்