ஏலேலங்கிளியே அடி ஏலேலங்கிளியே
எதுக்காக நீ அழுற ஏலேலங்கிளியே
என் விதிய நனச்சி நானழுத ஏலேலங்கிளியே
அதிகம் படிக்கும் கனவும் மமண்ணா போச்சி ஏலேலங்கிளியே
படிச்சு முடிச்சும் வேலை இல்ல ஏலேலங்கிளியே
போட்டித்தேர்வும் எழுதி எழுதி
சோர்ந்து போச்சு ஏலேலங்கிளியே
போட்டி பொறாமையும் பெருகிப் போச்சு ஏலேலங்கிளியே
போக இடம் தெரியலயே ஏலேலங்கிளியே
போற வழியும் புரியலயே ஏலேலங்கிளியே
வேலை வாய்ப்பும் கொறஞ்சி போச்சு ஏலேலங்கிளியே
அரசு வேலையெல்லாம் கனவா போச்சு ஏலேலங்கிளியே
எல்லாம் இப்ப தனியார் மயமாச்சி ஏலேலங்கிளியே
படிக்கும் சில பிள்ளையெல்லாம் ஒழுக்கம் தவறி போச்சி ஏலேலங்கிளியே
ஆசிரியர் பணியுமிங்கே முடமாச்சு ஏலேலங்கிளியே
ஏற்றி வைத்த தீபத்திலே ஏலேலங்கிளியே
எண்ணெய் குறைவது போல்
என் வாழ்க்கை தேயுதிங்கே ஏலேலங்கிளியே
தி.பத்மாசினி