வெப்பத்தை மெல்லிய இழையாக்கிப்
போர்த்தியதுபோல் ஓர் உணர்வு!
தங்கத்தை அப்படியே உருக்கி
சல்லடையின் வழி
ஊற்றி விட்டதுபோல்
ஓர் உணர்வு!
பழகிய இடங்கள் யாவும் புத்தம்புது இடங்களாய்
புதுவிதப் பரவசம்
தந்திடும் ஒளிவெள்ளத்தில்
நீந்தியதாய் ஓர் உணர்வு!
எல்லாமே
இளங்காலை நேரத்தில்
புதுஞாயிற்றின்
இளம்வெயிலில்
நனைந்து நான் பெற்ற சுகம்
அம்மம்மா
சுகமோ சுகம்!
த.ஹேமாவதி
கோளூர்