களமாடியும் கூட
திமில் பிடித்து
அடக்குவாரில்லை
வாடி வாசலின்
வழியே
திருப்பியனுப்பப்பட்டன
வாழுமிடங்களுக்கு
வீரமும்
மறமும்
மானமும்
எல்லாந்தாண்டி
ஊரெல்லாம் கேட்கிறது
சந்துகளின் வழியே
வந்த
விசில் சத்தம்
அடாவடியாய்
*பொன்.இரவீந்திரன்*