வயதுக்கு நீ வந்த
செய்தி கேட்டு _
நிலவுக்கு இதய அடைப்பு
பூக்களுக்கு சுவாச அடைப்பு
தென்றலுக்கு பாதை அடைப்பு
நீ
பருவம் அடைந்தது கண்டு
பாரினுல் பருவ மாற்றம் _
ஏப்பிரல் வெயிலில்
A C காற்று வீசுதடி இது
ஏப்பிரல் பூல் இல்லையடி..
நீ
தன் மாமன் மகள்
என சொல்லி _
வானவில் வானில்
உனக்காக குச்சி கட்டும்..
தத்தி தத்தி நீ
நடந்தாய் _ பூமி
தந்தி வீணை மீட்டுதடி..
அழகிய தமிழும்
உன் பெயரை எழுதி தன்
ஆயுளை கூட்டிக் கொண்டதடி..
முதல் வெட்கம் பார்த்து
படைத்தவன் கூட
பாறில் அடிமையாக கிடக்கின்றான்
வெட்கம் என்னும்
அழகியல் _ நீ
வெட்கப் பட்ட போதுதான்
முழுமை அடைந்தது..
யுகம் யுகமாக
உலகம் கண்ட
யுவதிகளில் ஒருத்தியும் கூட
உன்னைப் போல்
ஓர விழி பார்வையால்
உலகுக்கே சமாதி கட்டவில்லை
நரை விழுந்த காற்று
உன் சுவாசமாகி
இளமையாக திருப்பியது...
உன் ஆப்பிள் ஜாம் கன்னத்தை
கிள்ளிப் பார்த்து விட வேண்டும்
எனும் ஆசையில் _
விண்மீன்கள் யாவும்
தரை இறங்கியதால்
தரணி எங்கும் ட்ராபிக் ஜாம்..
வார்த்து எடுக்க
தீயில் உருகி
வலியுடன் இருந்த
ஆபரணத் தங்கங்களை
தளிர் மலரே..!
நீ அணிந்ததும் உன்னில்
ஆனந்தமாய் குளிர் காயுதடி..
சாய்ந்து சாய்ந்து உன் அழகை ரசித்த
பைசா நகர சாய்ந்த கோபுரத்துக்கு
கழுத்து வலியடி..
உன் அழகை பற்றி
மூணுமூணுத்து பெண்களுக்கும்
தொண்டை வலியடி..
அந்தி சூரியனின்
கன்ன சிவப்பு._
உன் இதழ் வருடிய தென்றல்
சூரியனை உரசி சென்றதோ..!
குளிக்க சென்றாய்
ஆற்றுக்கு வெப்ப காய்ச்சல்..!
கடித்த மீன்களுக்கு
வயகரா சாப்பிட்டது போல்
மோக பாய்ச்சல்
என் மீசைக்கு தந்தாய் வெட்கம்.
நீயே அடியேன் தேடிய சொர்க்கம்.!
விஜய்