உந்தன் விழிகளில் எத்தனை வர்ணமடி
அத்தனைக்கும் பல்வகை
குணமடி
விழிகளில் நிரம்பும்
பார்வைக்குள்
என் உருவம்
தெரிந்ததா
இல்லை
இமைபட்டு
உருவம் வெளியில்
தெறித்ததா?
பார்வையைப் பத்திரப்படுத்த
உன் விழிகளுக்கு
தெரிவதில்லை
தெரிந்திருந்தால்
உன்
கருவிழிக்குள்
பத்திரமாயிருப்பேன்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..