தொலைத்தது நீயா?
இல்லை
நானா?
தொலைந்தது மட்டும் தெரிந்து கொண்டேன்,,,,
நிலைக்குமிந்த பூமியிலே
நித்தமும்
உன்னை தேடி வந்தேன்,,,
கனக்குமிந்த நெஞ்சினிலே மனக் கணக்கில் இள முகத்தை பார்த்திருந்தேன்,,,,
தனக்கென ஓரிடம்
நீயிருக்க,,,,
உன் ஒரு
முகவரி தேடி நானிருக்க,,,,
இனியவை நாற்பது,
இன்னா
நாற்பதாக இடையினில்,
சொன்னால் நாற்பது வருடம் கழிந்து,
இறுதியில் கண்டேன் அறுபதில்
உன்னை
பல " முக வரிகளுடன் "
எங்கே உன் இளமை?
இன்றும் இருக்கிறது
என் மனதில்!
பாலா