மையிட்ட விழியாலே
கை தொட்டுப் போனாளே
மெய்வருத்தகூலி ஏதும் இல்லையே
அங்கு,
பொய் வருத்தம் மட்டும் வந்து
சொல்லியே,,,
தெய்வமாய் நினைத்து நானும் தேடியும் பார்த்துவிட்டேன்,
பொய்மானும் அங்கு இல்லையே,
அதை புரிந்தவர் வாழ்வில் இல்லை தொல்லையே,,,
விண்ணையும் பார்த்த வண்ணம் விடியும் வரை காத்திருந்தேன், முடிவும் தெரியவில்லையே,
அங்கே விடிந்தும் பயனில்லையே,,,,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றையொன்று
இன்னமும் மறக்கவில்லையே இடையில்
இருக்கும் லட்சுமணன் சிறு பிள்ளையே,,,,,
பாலா