தைமகளாம் அத்தைமகளே
தமிழினத்தை காக்க
ஒத்தையில் வா மகளே
வித்தைகளை நீ புரிந்து
ஆங்கில மோகமது
ஆண்டியையும் ஆள்கிறது
தமிழமுது பருகாமல்
தரணியில் தமிழ் குழந்தைகள்
விந்தையான நிலைதான்
சந்தையில் நிற்கிறது
பாரதி கண்ட கனவுதான்
பாதியிலே நிற்கிறது
சாரதியாய் நீ வந்து
தமிழ் பாடி மகிழ்வூட்டு
தை மகளே அத்தை மகளே
தமிழ் பொங்கல் நீ பொங்கு
கவிஞர்.மு.இராஜேஷ்
புதுவை