ஏழை வீட்டின்
பூக்கோலம் கண்டோ
மாக்கோலம் கண்டோ
பொங்கல் வரவில்லை
அவர்களின் ஏழ்மைக் கோலம் கண்டு
இன்றோர் செல்வோமென்று வந்தது
எசமான் வீட்டில் உள்ள பழைய துணிகளுக்கும்
புதுத்துணியென்ற பவுசு வந்துவிட்டது இன்று
பிள்ளைகளும் பழையதை புத்தாடையாக உடுத்தி இன்பம் துய்ப்பார்கள்
பெற்றோர்களோ பிள்ளைகளின் இன்பத்திலேயே இன்பம் காண்பார்கள்
எசமான் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு
சலித்து போன பிள்ளைகளுக்கு
இன்றோர் நாள்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆகும் சர்க்கரைப் பொங்கலை
அமிழ்தமாய் எண்ணி உண்பார்கள்
பொங்கலன்று ஏழைகளின் இல்லத்திலும் உள்ளத்திலும் மட்டும்
மகிழ்ச்சியல்ல பொங்கலுக்கே அன்று தான் மகிழ்ச்சி
அவர்களை சந்தோசப் படுத்தியதால்
தி.பத்மாசினி