Header Ads Widget

Responsive Advertisement

பாத்திரம் அறியும் பாத்திரம்

வழியோரம்
ஒருவன்
விழுந்து கிடந்தான்
உதவ ஓடினேன்

அவன் தடுத்தான்

முறைத்துப் பார்த்தேன்
கருவி வைத்திருக்கிறாயா என்றான்

என்ன கருவி என்றேன்

இவனுக்கு
வயிற்றுப் பசி
மயக்கமா
இல்லை
மதுவின் ருசி
மயக்கமா என  
கண்டுபிடிக்க

புதிராய் பார்த்தேன்

மேலும் தொடர்ந்தான்

முன்பெல்லாம்
பிச்சை எடுப்பவனிடம்
பாத்திரம் இருக்க 
வேண்டும்
தற்போது பிச்சை 
இடுபவனிடம்
பாத்திரம் இருக்க 
வேண்டும்

புருவமுயர்த்தினேன்

பாத்திரம் அறியும் 
பாத்திரம் என்றான்

-வெள்ளத்துரை