🌹விழிப்புணர்வு 🌹
அறிவியல் கண்ட
அதிசயங்கள்
அழிந்தே தான் போகிறது
டைடானிக் முதல் ட்வின் கோபுரம் வரை
அன்றுமுதல் இன்றுவரை
அதுவே இயற்கை நியதி
இதற்கும் விதிவிலக்காய் தோன்றியதே
அறிவியலையும்
ஆட்டங்காணவைத்தது
நெகிழி அரக்கனின் பிறப்பு
ஆரம்பத்தில் அதுவே பெறும்
சிறப்பு!
போகப்போக வாழ்வே சீரழிப்
பு!
அறிவியலால் அதனை
ஆக்க முடிந்தது
அப்புறப்படுத்த முடிந்தது
ஆனால் முயன்றும்அதனை
அழிக்க முடியாமல்போனதே
ஆனந்த அதிர்ச்சியே!!!
காலப்போக்கில் ......
காலை தொட்டு இரவுவரை
கணப்பொழுதும்
பிரியாது இவனின் ஆட்சியில் நம்மையும்
அறியாது அடிமைசாசனம்
எழுதியே கொடுத்து விட்
டோம்!
எளிதில் அறிவை கொளுத்தி
விட்டோம்மவந்ததோ இன்று விழிப்புணர்வு!?!?!?!
நெகிழி அரக்கனை ஓழிக்க
ஆனால் இது எளிதா?
அத்துனை பலங்கொண்ட
பயங்கரவாதி அவன்!!!
உடனிருந்து கொல்லும்
வியாதி அவன்!!!
சாதி போன்றே நெகிழியும்
தீவிரவாதியே!!!
புகையில்லா போகி போல,
பகையில்லா ஊரு போல,
நெகிழியில்லா உலகு
படைப்போம்!
இருப்போம் விழிப்பாய்!!
அவனை...
எரிப்போம் நெருப்பாய்!!
🌹🌹வத்சலா 🌹🌹