நாத்து முடி கையிலே
நாலணா தான் பையிலே
வரப்புக்குள்ள வாழ்க்கை தானே அண்ணாச்சி,,,,
எங்க வாழ்க்கைதானே சொல்லப் போனால் பொன்னாச்சு,,,,
ஆத்துக்குள்ள தண்ணியாம்,
அயலூரு கன்னியாம்,,,,
வயலு, ஊத்துக்குளி ரோட்டு மேலே அண்ணாச்சி,,, நாங்க,
நாத்து நட்டு வெளய வைக்கும்
சம்சாரி,,,,
தூக்கிப் போடும் நாத்து முடி துடிப்போடு
நான் புடிச்சு, பிரிச்சுப் போட்டு நட்டு பார்ப்பேன் அண்ணாச்சி,,,,
அது,
பெரிசாக
வளர்ந்து நிக்க அண்ணாச்சி,,,,
காட்டுக்குள்ள நெல்மணிகள் கழனியெல்லாம் சேர்த்து வைக்க,
நாடுதானே வளம் காணும் அண்ணாச்சி,,,
அதில்,
எங்களைத் தான் யாரறிவார் அண்ணாச்சி,,,,
கோட்டையில பறக்கும் கொடி நிமிர்ந்து நிற்க வேணுமின்னா, குனிந்து நாங்க
நட வேண்டும் அண்ணாச்சி,,,,
நாங்க, நிமிர்ந்து பார்க்க நேரம் கூட வந்தாச்சு,,,,
முடிசூடா மன்னன் கூட ,
நாத்து
முடியாலே உயர்ந்தவர் தான்
கதை கேட்டு நட்டு வந்தோம் அண்ணாச்சி,,,
நாங்க, இல்லையினா நீங்களும் தான் என்னாச்சு,,,,
நீர் உயர காத்து நின்று,
நெல் உயர
பார்த்து நின்றோம், குலம் விளங்க நாடெல்லாம்
பொன்னாச்சு,,,
எங்க உழைப்பெல்லாம் எப்போதும் (வயலில்) மண்ணோடு மண்ணாச்சு,,,,,
பொன்னாக நீங்களெல்லாம், மண்ணாக நாங்களெல்லாம்,,,
விதி வகுத்த வழி தானே அண்ணாச்சி,,,
நாங்க,
நிமிந்திருக்க குனிந்திடவும், குனிந்திருக்க நிமிர்ந்திடவும்,
கரம் கொடுப்பாள்
எங்கள் மீனாட்சி,,,
மதுரை மீனாட்சி,,,,
பாலா