Header Ads Widget

Responsive Advertisement

இல்லத்தரசி


அறம் எனப்படுவது யாதெனில் 

கல்வி தானம் என்பார்

கல்வியாளர்

பொருள் தானம் என்பார்

மனமுள்ளோர்

உறுப்பு தானம் என்பார்

மனிதம் காப்போர்

ஆனால்

அறத்தையே தானம்

அளிப்பவளே

இல்லத்தரசி 

ஒரு வீட்டின்

உன்னத இளவரசியாய்

உலாவந்தவள்

மறுவீட்டில் வந்தாள்

மகாராணியாய்

அங்கே அவள்

சூட்டிக்கொண்டது

சுடரும் வைரக்கிரீடமல்ல

முப்பொழுதும் வலிதரும்

முட்கிரீடம்

வலிக்கும் என்று தெரிந்தே

சூட்டிக்கொண்ட சுடர்க்

                              கொடி

பஞ்சாங்கம் மிஞ்சும்

பழமைவாதிகளுக்காய்

நெஞ்சில் இடங்கொடுப்பாள்

நாத்திகளின் 

சூத்திரங்களை

இலகுவாய் மேற்கொள்வாள்

கொழுநன்களை

குழந்தைகளாய் மனதில் 

தூக்கிச்சும்ப்பாள்

தாலிகட்டியவன்

தடம்மாறினும்

தடுமாறினும்

சாரதியாய் தோழியாய்

அவதாரமெடுப்பாள்

தாம்பத்ய அறம்செழிக்க

தன்வலி மறப்பாள்

வாரிசுகள் வளம்கண்டே

வாழ்நாளின் நலம் காண்பாள்

தோல்விகள் துரோகிகள்

இவள் தாங்கும்

சிலுவைமரங்கள் அதை

சுமப்பதையும்

சுகமாய்க்காண்பாள்


தாயாய் தாரமாய் தோழியாய்

சேவகியாய் தாசியாய் பல்வேறு அவதாரம் எடுக்கும்

நவக்கிரக நாயகியே

இல்லத்தரசி


🌹🌹வத்சலா🌹