ஏழுபிறவிகள்தோறும்
மாறிமாறிவரும் பிறவி
ஈடேற பிறந்த வள்ளுவர்
ஏழுசீர்களை குறளாக
யாத்துத் தந்தார்!
இன்றளவும் தமிழின்
பெருமையைக்
காத்துநிற்கின்றார்!
தினம்ஒரு திருக்குறளால் நம் மனதைத் தட்டுவோம்.!
தடுமாற்றம் இல்லாத
பாதையிலே சென்றிடுவோம்!
தாம்பெற்ற பிள்ளைக்கே சொத்து
எழுதிவைக்கும் மனிதர்கள் மத்தியிலே
உலகமக்கள் யாவருக்குமே சொத்து
எழுதிவைத்துச்சென்ற
ஒரே தமிழனாம்
வான்புகழ் வள்ளுவனை இன்று
போற்றி வணங்குவோம்.!
அவன் எழுதிவைத்துக்
கொடுத்த சொத்தாம்
திருக்குறளை
தினம் ஒன்று என்ற
அளவிலாது ஓதி
நல்வழிதான் காண்போமே!
ஹேமாவதி
கோளூர்