முதல் குறளில் இறைவன் ஒருவனென உணர்த்தி, ஈரடியில் ஈரேழு உலகையும் அடக்கி,
தமிழின் பெருமையைத் தரணியில் நிலைநிறுத்தி,
இல்லறமே நல்லறம் என்பதை உணர்த்தி,
உழவையும் தொழிலையும் வானளாவ உயர்த்தி,
ஆளுவோர் கடமைகளை அழகாக விளக்கி,
வானின் சிறப்பை வகைவகையாய் விளம்பி,
விஞ்ஞானத்தையே ஈரடியில் புகுத்தி,
கல்வியை, செல்வத்தை, கடமையைப் போற்றி,
பெற்றோரை, உற்றாரை, பெரியோரைப் புகழ்த்தி,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பி,
தமிழுக்குப் பெருமையைத் தந்தவன் தினமின்று,
தமிழர்க்குப் பெருமையைத் தந்தவன் தினமின்று,
தரணி போற்றும் திரு வள்ளுவன் தினமின்று,
வணங்குவோம் அவனை அவன் சொன்ன வழிநின்று.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*