படகை கரை சேர்ப்பதுகலங்கரை விளக்கம்
மனிதனை கரை சேர்ப்பது குறள் விளக்கம்
பிறர்
அடித்தால் வலிக்கும்
குறள் அடியால் வாழ்வு இனிக்கும்
எப்பாலைப் பருகினாலும் வயிறு நிறையும்
வள்ளுவனின் முப்பாலைப் பருகினால்
அறிவு நிறையும்
மரியாதைக்குரிய நூல் ஒன்று என்றால் அது
திருக் குறள்
பரமன் உலகை அளந்தது இரண்டடியால்
வள்ளுவன் மனிதனை அளந்தது இரண்டடியால்
முப்பாலை மூன்று வேளையும் பருகினால்
நாம் எவ்வூருக்குச் சென்றால்
நீதியோடும் நேர்மையோடும் வாழலாம்
தரணியில் தலைநிமிர்ந்து வாழ
வாழ்க்கையை அச்சமின்றி வாழ
ஊரோடு ஒட்ட ஒழுக
நட்போடு சேர்ந்து வாழ
தினமும் குறள் படிப்போம்
குறளின் பெருமையை உயர்த்துவோம்
தி.பத்மாசினி