🌹
பொன்னாய் சிவந்ததுவானம்!
குளிரைப்போர்த்தியது
மேகம்!
நேற்றிருந்த பனிச்சாரல்
நெடுந்தூரம் போனதோ?
தேடியது புல்வனம்!
மந்தகாசப் புன்னகையுடன்
மொட்டுக்களை
மலர வைத்தது தென்றல்
அலை வந்துபோன
ஈரத்தடம் தேடியது கடற்காற்று!!
சிப்பி துளைத்த மழைத்துளி
முத்தெனமாறித்துளிர்த்தது !
வண்டினம் துளைத்தமூங்கில்
வழி நுழைந்த காற்றோ
மோகனம் இசைத்தது!
எட்டிப்பார்த்த நட்சத்திர
சிணுங்கல்கள்.....
எட்டுத்திக்கும் மினுக்கியது!
இயற்கையின் இந்த
பொன்னூஞ்சலாட்டம்
காணுந்தோறும்.....என் இதயம் கேட்ட ஒரே கேள்வி
எத்தனைக்கோடி இன்பம்
வைத்தாய் ?எங்கள்இறைவாஇறைவா!
🌹வத்சலா🌹