முதன்முதலாய்ச்
சந்தித்தன விழிகள்!
மனதுக்குள் எழுந்தது கேள்வி!
என்னைக் கரம்பிடிக்கும் துணைவன் இவன்தானோ?என்று!
மனம் திரும்ப திரும்பக் கேட்க
விழிகளால் மீண்டும் மீண்டும்
இரகசியமாய் அவனைப் பார்க்க
விடைதெரியாமல் அவள் தடுமாறினாள்!
அதேவேளையில் அவளின் விழிமுனையால் தாக்குண்ட அவன் விழிகளிடம் அவன்மனம் தீர்மானமாய் அறிவித்தது என்வாழ்க்கைத் துணைவி இவளே இவளன்றி யாருமில்லை என்று!
அவரவர் மனங்கள் பேசியது அவரவர் விழிகளிடமல்லவா!
அந்த விழிகள் இப்போது ஒன்றையொன்று கௌவிய நிலையில் இருந்து
மனங்களையும் பிணைத்துவிட
மகிழ்ந்தாள் நங்கை
தன்கணவன் இவனே என்று!
*த.ஹேமாவதி*
*கோளூர்*