இளைஞனே
சின்னப் பயலாய்
இருக்கையிலே நீ
கேட்ட கதைகளை
நினைவுகூறுகிறேன்
தாகத்தைத் தீர்த்துக் கொண்ட ஊகமுள்ள காகமும்
முயல் தூங்கி ஆமை வெற்றி பெற்ற கதையும்
சிங்கத்தை வென்ற எருதுகளின் கதையும் மறந்தாயா?
வெற்றி என்ற இலக்கை மறந்து
தோல்வியைத் தழுவ நீசெல்ல
எத்தனை பாதைகள் ?
அவையாவும் பளபளப்பாய் உன்னை அழைக்கும்.
படிக்கின்ற பருவத்தில் பெண்களின் கண்ணோட்டத்தில் மயங்காதே பின் வாழ்வில் தேங்காதே!
மதியைச் சிதைத்து உடல்நலத்தை உருக்குலைக்கும் போதையின் பாதைக்கு ஆயிரம் வழியுண்டு உன்னைச் சுற்றி!
அவற்றைத் தவிர்த்து வாழ்விலேநீ உறுதியாகப் பிடிக்கவேண்டும் கெட்டியாக வெற்றி என்ற இலக்கைப் பற்றி!
த.ஹேமாவதி
கோளூர்