செல்வந்தர்களுக்கு நாளும் திருநாளே
ஒவ்வொரு நாளும் திருவிழாவே
தினம் ஒரு புத்தாடை
ஆண்டு முழுதும் புத்தாடை
தினம் ஒரு உணவகம் பசியாற
பொங்கலும் எல்லா நாட்கள் போலவே தான் அவர்களுக்கு
பீட்சாவும் பர்கரும் தினமும் சளைக்காமல் உண்பவர்களுக்கு எங்கே தெரியும்
பொங்கல் சுவையின் அருமை
சமையற்காரரின் கைபக்குவத்தில்
உண்பவர்களுக்கு எப்படித் தெரியும் அம்மாவின் கைப்பக்குவம்
அம்மாவின் கைபட்டால் பழைய சோறும் பஞ்சாமிர்தம் ஆகுமென்று
இந்த வகையில் ஏழைகளே பணக்காரர்கள்
போகட்டும் பரவாயில்லை
கௌரவம் பார்க்காமல்
உங்கள் ஏழை நண்பர்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்
பொங்கல் பண்டிகையின் சிறப்பை அங்கே காண்பீர்கள்
அங்கு உமக்கு திகட்டாத அன்பும்
அள்ள அள்ள குறையாத பாசமும் கிடைக்கும்
ஒவ்வோர் ஆண்டும் உம்மை தானே இழுத்துக் கொண்டு வரும்
தி.பத்மாசினி