அன்பைப் பொழியும் சிலரது சிரிப்பு,
ஆனந்தம் அளிக்கும் பலரது சிரிப்பு.
இடையூறாய்த் தெரியும் சிலரது சிரிப்பு,
இதமாய் இருக்கும் பலரது சிரிப்பு.
வெறுப்பைக் கொடுக்கும் சிலரது சிரிப்பு,
விருப்பத்தை வளர்க்கும் பலரது சிரிப்பு.
ஆசையை வளர்க்கும் சிலரது சிரிப்பு,
ஆறுதல் அளிக்கும் பலரது சிரிப்பு.
அகத்தை உணர்த்தும் சிலரது சிரிப்பு,
அகத்தை மறைக்கும் பலரது சிரிப்பு.
சிரிக்கவைக்கும் சிலரது சிரிப்பு
சிரிப்பாய் சிரிக்கும் பலரது சிரிப்பு.
மழலையின் சிரிப்பு மனம் கொள்ளை கொள்ள,
மங்கையின் சிரிப்பு மயக்கத்தைக் கொடுக்க,
தந்தையின் சிரிப்பு தயக்கத்தை நீக்க,
அன்னையின் சிரிப்பு அன்பினைப் பொழிய,
மனைவியின் சிரிப்பு மகிழ்ச்சியை அளிக்க,
ஏழையின் சிரிப்பு நிறைவை வழங்க,
இன்பச் சிரிப்பே மனதினில் நிலைக்க
சிரிப்பே அழகாய் மாறியதிங்கே,
சிரிக்கவைப்பவர் சிறக்கிறார் இங்கே.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*