Header Ads Widget

Responsive Advertisement

மனவுறுதி



விழியென்ற முகாந்திரத்தில்
நால்வகைப் படைகொண்டு என்னை வென்றவளால்
நானில்லாத தனிமைகளில்
மயங்கும் மாலைப் பொழுதுகளில்
கவ்விடும் இரவினிலே நிலவின் ஒளிப்படையின் தாக்குதலைச் சமாளிக்கத் திணறுவாள்;ஆனாலும்
இரவென்ன எத்தனை படைகள் எதிர்வந்தாலும் அத்தனையும் சமாளிக்க ஐந்தாவதாய் அவளிடம் உள்ளதே
மனவுறுதி என்ற பேராற்றல்படை!

த.ஹேமாவதி
கோளூர்