மனமே மனமே
கலங்காதே!
மகிழ்வே மகிழ்வே
எந்நாளும்
மனமதில் கொண்டு
வாழ்ந்திடுவாய்!
கவலைகள் எதற்கும் கொள்ளாமல்
கலகலப்பாக இருந்திடுவாய்!
மூடிய மனதைத் திறந்துவிடு!
காற்றாய் எண்டிசை
பரவவிடு!
துள்ளலாய் எங்கும்
பாய்ந்தோடு!
நீரின் ஓட்டமாய்
வேகமெடு!
தேங்கிய நீரில்
தோன்றிடும் பாசியென
சோம்பலில் அமிழ்ந்து முடங்காதே!
நல்லதே நடக்குமென என்றும் நினைத்திடு!
மகிழ்ச்சியாய் எப்போதும் இருந்திடு!புன்னகைப் பூவினை இதழோரம் பூக்கவிடு! ஒளிரும் முகத்தால் உலகை வென்று வாழ்ந்திடு!
த.ஹேமாவதி
கோளூர்