மனதில் முயலாமையை உடையவர்களே ஊனமுற்றோர்கள்
உடலில் குறைபாடுடையவர்கள்
ஊமுற்றவர்கள் அல்ல
அவர்கள் மனதால் ஊனம் அற்றவர்கள்
நாம் அவர்கள் புறத்தைப் பார்க்காமல் அகத்தை பார்ப்போம்
அவர்களுக்கும் ஓர் மனதுண்டு
இறைவன் இவர்களை படைக்கும் போது
சற்று கவனக் குறைவாயிருந்தார்
பின் இறைவனே வருந்தி
அவர்களுக்கு ஏதோ ஒரு திறமையை அபரிமிதமாக அளித்துவிட்டார்
அதனால் தான் அவர்கள்
மாற்றுத் திறனாளிகள்
அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல
அசாத்தியமானவர்கள்
சாதனை மனிதர்கள்
முடியும்போதெல்லாம் அவர்களுக்கு உதவுவோம்
அவர்களுக்கு முன்னுரிமை அளிப்போம்
அவர்கள் வாழ்வில் முன்னேற
வழிவகை செய்வோம்
தி.பத்மாசினி