தூறல் வருமுன்னே
சாரல் வந்தது!
வானம் சிந்திடும்
பூவாக வந்தது!
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
முத்தின் சிதறலாய்
ஈரத்துளிகள் சாரலாய்ப் பொழிந்திட
மழையிலும் மெல்லினம் உண்டென்று குளிர்வாடை காதோரம் சொல்லிச் சென்றது
மனதைச் சில்லென்ற குளுமையால் அள்ளிச் சென்றது!
குளுகுளு கண்ணாடியை யாவருக்கும் அணிவித்துச் சாரல் மகிழ்ந்தது!
ஆதவன் அணைந்துக் குளிர்ந்தானோ?தணலிழந்து புனலாகிப் போனானோ?என்றே யாவரையும்
வியக்க வைத்த நாளாக இச்சாரல்தினம் அமைந்துப் போனது!ஆகா
வியர்க்காத நாளாக
வெயில் அடிக்காத நாளாக
பனிப்போர்வைக்குள்
புகுந்தாற்போல்
மலைவாழிடம் சென்றாற்போல்
காலை முதல் இதோ இந்நிமிடம்வரை
குளுகுளுப்பாய் இருக்கிறதே!
சில்லென சில்லெனமனதுக்குள்
பூக்கிறதே!
ஆகா!இந்த
மார்கழியின் முதல்நாள் இவ்வளவுஇன்பத்தை
அள்ளித்தந்த கருணையை என்னென்பேன்!ஏதென்பேன்!
திக்குமுக்காடிப் போய்விட்டேன்!
இயற்கைக்கு மனதார நன்றி சொன்னேன்!
த.ஹேமாவதி
கோளூர்