கடலில் விழுந்தால் காணாமல் போகும்
அருவியில் விழுந்தால் ஐக்கியமாகும்
மண்ணில் விழுந்தால் வாசம் வீசும்
சிப்பியில் விழுந்தால் முத்தாக மாறும்
குளத்தில் விழுந்தால் குடிநீராகும்
ஆற்றில் விழுந்தால் ஓடியே போகும்
ஏரியில் விழுந்தால் ஆவியாய் போகும்
குட்டையில் விழுந்தால் கால்நடைகளுக்கு குடிநீராகும்
தார் சாலையில் விழுந்தால் காய்ந்து போகும்
வயல்வெளிகளில் விழுந்தால் பயிராகும்
மழைத்துளியை சேர்த்து வைத்தால் நம் உயிர் காக்கும்
தி.பத்மாசினி