பெண்ணே!
உனக்கு மட்டும் ஏன்
இத்தனை அழகு!
வர்ணித்துக்கொண்டே போகிறேன்
அழகாகிக் கொண்டே தொடர்கின்றாய்
உன்னை வர்ணித்த வரிகளைக் கடந்து,
வெகு தூரம் தேடிச் செல்கிறேன்
உன் வர்ணனைக்கான வார்த்தைகளை,
முத்தமிழிலும் முழுகிப் பார்த்தேன்
வார்த்தைகளுக்கு வலைவீசி,
மூச்சு மட்டும் தினறியது
முன்னேற்றம் இல்லை,
வர்ணனை செய்ய முடியா
வஞ்சிக் கொடியே!
வர்ணிக்க
வார்த்தைகளே படைக்கப்படா
பேரழகி நீயே !!!