காற்றுக்கு உருவம் இல்லை
அது
பல நேரம் தென்றலாய்
சில நேரம் புயலாய்
இடையில் சூறாவளியாயும் மாறி
இன்பமும் துன்பமும் தருகின்றன
அன்புக்கு உருவம் இல்லை
இதை
கொடுப்போர் உள்ளமும்
பெறுவோர் உள்ளமும்
இரட்டிப்பான மகிழ்ச்சியில் துள்ளும்
காதலுக்கு உருவம் இல்லை
இது
காதலர்களுக்கு இன்பத்தையும்
பெற்றொருக்கு துன்பதையும் தந்து
கௌரவக் கொலைகளும் செய்யத் தூண்டும்
பொறாமைக்கு உருவம் இல்லை இதை
வைத்திருப்போர் மனதும் அசுத்தமாயும்
அருவறுப்பாயும் இருக்கும்
பொறாமை தன்னைத் தானே அழித்துவிடும்
கிசுகிசு க்கு உருவம் இல்லை
இதை
சொல்பவர்க்கும் எழுதுபவர்க்கும் சுலபம்
இதில் சிக்கித்தவிப்போரின்
உள்ளமும் கெடும்
வாழ்க்கையும் கெடும்
உயிரும் கூட. போகும்
பசிக்கு உருவம் இல்லை
இது
வந்தால் தீய எண்ணங்களும்
தீயசெயல்களும் சேர்ந்துவிடும்
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
மற்றவரிடம் கையேந்தவும் வைத்துவிடும்
பட்டினிக்கு உருவம் இல்லை
பட்டினிக்கு பசி வந்தால்
மனிதனையே தன் பசிக்கு இரையாக்கிவிடும்
உருவமுள்ள மனிதனைக்கூட உருவமில்லாமல் செய்துவிடும்
உருமுள்ள மனிதன்
உருவமில்லாதவைகளிடம்
அடிக்கடி தோற்று போகிறான்
அதனை எதிர்த்து நின்று நாமும் வென்றிடுவோம்
தி.பத்மாசினி