Header Ads Widget

Responsive Advertisement

நேற்றைய கனவு

வன வெளியெங்கும்

தன்னிருப்பைப்

பதிவிட்டபடி


விரைந்தோடும்

நதியில் 

தாகங்தணித்துத்

தன் பாடலைத்தொடரும்

குயில் 


இப்படியெல்லாம் 

வந்து சேர்ந்தது 

நேற்றைய 

கனவில்


நாவைத்தொலைத்தவனின்

புல்லாங்குழல் 

இசையாய்


*பொன்.இரவீந்திரன்*