Header Ads Widget

Responsive Advertisement

திருக்குறள்


எப்பாலுக்கும் இணையில்லாததும்


கலப்படமில்லாததும்


தாய்ப்பாலைப்போல் சிறந்ததும்


முப்பாலையும் கொண்டது திருக்குறள்


எப்பாலை வெறுப்போரும் 


முப்பாலை வெறுக்கமாட்டார்


முப்பால் சுவைக்க சுவைக்க திகட்டாதது


வெண்பாவிலக்கணத்திலேயே

குறள் வெண்பா தோன்றக் காரணம் இது


குறள் வெண்பாவால் ஆன

முதல் நூலும் ஒரே நூலும் இதுவே


முப்பாலை முக்காலமும் படித்தால்


நமக்கு எக்காலமும் துன்பமில்லை


உலக மக்கள் யாவரையும்

ஒரே நூலால்(குறள்)

கட்டி வைக்க ஆசை


அறம் செய்து

பொருள் சேர்த்தால்

இன்பமாய் வாழலாம்


என்கின்ற கருத்தை மறைமுகமாய் உணர்த்துகிறது


திருக்குறள் கண்ணாடி போன்றது


நாம் அதை எப்படி பார்க்கின்றோமோ

அப்படியே அது காட்சிதரும்


திருக்குறள் நல்ல ஆசானாய் 

ஆலோசனைக் கர்த்தராய்

நம்மை அழகாய் வழிநடத்தும்


திருக்குறள் ஒரு கலைக்களஞ்சியம்( Encyclopedia)

 அதில் இல்லாத பொருளே இல்லை


ஒவ்வொரு நாளும் குறள் படித்து தேர்ந்தால்

கற்றோர் சபைதனிலே நம் குறள் ஒலிக்கும்


ஒரு சிறு குறள்

எவ்வளவு அதிகாரம் படைத்தவரின் குரலையும் அடக்கிவிடும்


திருக்குறளைத் தொட்டால் 

நம்வாழ்வு துலங்கும்


நாம் அதை விட்டால் நம் வாழ்வும் தயங்கும்


ஒவ்வொரு  தமிழன் வீட்டில் தவறாமல் இருக்க வேண்டியது 


குறள் திருக்குறள்


தி.பத்மாசினி