நாங்கள் உழைக்கத் தயாராயிருக்கிறோம்
எங்கள் உடம்பில் தெம்பும் உண்டு
எங்கள் மனதில் திறமும் உண்டு
எங்கள் நெஞ்சில் உறுதியும் உண்டு
எங்கள் உழைப்பில் நம்பிக்கையும் உண்டு
ஆனால் உழைப்பதற்கு வேலை கிடைக்கவில்லை
வேலை தேடுவதே எங்கள் வேலையாயிருக்கிறது
இதிலேயே எங்கள் உழைப்பு வீணாகிறது
தி.பத்மாசினி