எத்தனை பெயர்கள்?
விண்ணிலே உலவும் முகிலே
நொடிக்கோரு முறை
உருவங்களை மாற்றிக் கொள்வதில் நீ ஒரு ஓவியன்!
மெல்லிய இழைகளாய் மழைதனைப் பெய்வதால் நீ ஒரு
நெசவன்!
உங்களுக்குள் மோதி ஓசைதனை எழுப்புவதால்
முகிலே நீஒரு
பாடகன்!
மழையெனப் பொய்க்காமல் பெய்து நெல்மணிதனைக் கொழுத்திடச் செய்வதால் நீயும் ஓர் உழவன்!
ஓரிடந்தனிலே நிலையில்லாது
வானிலே உலவுவதால் நீயும்
ஒரு செல்வமே!
த.ஹே