யாதொரு மொழியினரும்
தம் தாய் மொழியை வளர்க்க பிரயாசப்படுவதில்லை
வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம்
தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க வேண்டியதாயிருக்கிறது
அதிக பி.யாசப்பட வேண்டியதாயிருக்கிறது
தமிழனென்கின்றோம்
தமிழில் பேச மறுக்கின்றோம்
தமிழனென்கின்றோம் தமிழில் படிக்க. மறுக்கின்றோம்
தமிழனென்கின்றோம் ஆங்கில மோகத்தில் அலைகின்றோம்
இதர மொழிகளைப் படிக்கின்றோம்
தமிழை படிக்க மறுக்கின்றோம்
பச்சைத்
தமிழானாய் இருப்போம்
தமிழை சுவாசிப்போம்
தமிழை சுவைப்போம்
தமிழை நேசிப்போம்
தமிழை காப்போம்
தி.பத்மாசினி