*ஐ* ந்திலக்கணத்திலும் சிறக்க வேண்டும், ஐம்பொறியும் உனக்கு அடங்கவேண்டும், ஐங்குரவரையும் நீ மதிக்கவேண்டும்.
*ஒ* ற்றுமையை நீ போற்றவேண்டும்,
ஒத்துழைப்பவனாய் இருக்க வேண்டும், ஒப்பான் இவன் எனச் சொல்லவேண்டும்.
*ஓ* தல் இல்லாமல் நீ உதவ வேண்டும், ஓய்தல் இல்லாமல் நீ உழைக்க வேண்டும்,
உழைத்து
ஓடை போல் வளத்தைப் பெருக்கவேண்டும்.
*ஔ* வையாய்த் தமிழை வளர்க்கவேண்டும்,
திண்மையாய் என்றும் இருக்கவேண்டும்,
ஔடதம் தவிர்த்து வாழவேண்டும்,
என்றும்
ஔடதம் தவிர்த்து வாழவேண்டும்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*