வானம் போல்
சிலரது மனம்
பரந்து விரிந்தது
சிலரது மனம்
அவ்வப் போது
மாறக் கூடியது
சிலரது மனம்
பிறருக்கு உதவக்கூடியது
சிலரது மனம்
பனியைப் போல்
மென்மையானது
சிலரது மனம்
வெயிலைப் போல்
பிறரை வாட்டக் கூடியது
சிலரது மனம்
யாருடனும் சேராது
சிலரது மனம்
தன்னிச்சையாய் செயல்படும்
சிலரது மனம்
பலரையும் தனக்கு
கீழ் வைத்திருக்கும்
வானமின்றி வையகமில்லை
நல்ல மனமின்றி
வாழ்க்கை சிறப்பதில்லை
தி.பத்மாசினி