மனதுக்குப் பிடித்தவளை மணப்பதிலல்ல மகிழ்ச்சி,
மனநிறைவோடு வாழ முடிந்தால்தான் மகிழ்ச்சி.
பிள்ளைகளைப் பெற்று வளர்த்துவதல்ல மகிழ்ச்சி,
பிள்ளைகள் பிள்ளைகளாய் வளர்ந்தால் தான் மகிழ்ச்சி.
வேலை தந்த பதவியின் சுகமல்ல மகிழ்ச்சி,
வேலைதரும் நிறைவில் இருக்கிறது மகிழ்ச்சி.
எத்தனைகாலம் வாழ்கிறோம் என்பதலில்ல மகிழ்ச்சி,
நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தால் தான் மகழ்ச்சி.
எவ்வளவு சம்பாதித்தோம் என்பதல்ல மகிழ்ச்சி,
எத்தனை பேரைச் சம்பாதித்தோம் என்பதுதான் மகிழ்ச்சி.
நாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்வதல்ல மகிழ்ச்சி,
பிறர்மகிழ நாம் வாழும் வாழ்க்கைதான் மகிழ்ச்சி.
மகிழ்ச்சியாய் இருப்பதாகக் காட்டுவதல்ல மகிழ்ச்சி,
மகிழ்ச்சியாய் இருந்து காட்டுவதுதான் மகிழ்ச்சி.
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.