Header Ads Widget

Responsive Advertisement

பால்



திரவங்களில்  புனிதமானது பால்!
இதன் சிறப்பைக்
குறிப்பிடும் பல நூல்!
அன்னை என்றால்
பால் இணையும்!
பால் என்றால்
அன்னை நினைவு வரும்!
நூலில் சிறந்தது முப்பாலாகும்!
பாலில் சிறந்தது தாய்ப்பாலாகும்!
தாய்ப்பால் இல்லா
குழந்தைகட்கு
ஆவின்பாலே துணையாகும்!
ஆவும் தாயும் ஒன்றாகும்!இதை உணர்ந்தால் யாவும் நலமாகும்!
சத்துகள் முழுமையாய் நிறைந்த உணவு
தேகத்தைப் பலமாய் ஆக்கும் உணவு
ரோகத்தை தூர
விரட்டும் உணவு
பாலின்றி ஏதுண்டோ அவனியிலே!

த.ஹேமாவதி
கோளூர்