கோவலன்:
முழுநிலவை விஞ்சியதோ இவள்முகம்!அன்றி
இவள்முகத்தை விஞ்சியதோ முழுநிலவு!
மிஞ்சிய நேரமெல்லாம் இவள்நினைவே கோவையாய் நெஞ்சில் உலா வருகிறதே!அந்த
பெண்ணணங்கை வாழ்வில் என்னோடு கோக்கவா?அன்றி நீக்கவா?நீக்க முயன்றினும் அவள் நினைவே விஞ்சுகிறதே!என்செய்வேன் நான்!
மாதவி:
மாறனோ?அவன்
என்னை ஆளவந்த மன்னனோ?
அவனை நினைக்கையிலே
நான் அணிந்துள்ள
கோத்த முத்துமாலை அவிழ்ந்து முத்துகள் சிதறி ஓடுகிறதே! மாறாக என்சிந்தனை முழுவதும் மிஞ்சாமல் முழுதாய் அவனோடு கோத்துக் கொள்கிறதே!
மன்மதனையும் விஞ்சிய இவ்வெழில்மகன்
என்னிதயத்தை என்னைக் கேளாமலேயே கவர்ந்துக் கொண்டான்!இதுவரை நான் வாழ்ந்தது வீணே!இனி மிஞ்சிய காலமெல்லாம் இவனோடு கைகோத்து காதலில் அந்த ரதியையும் விஞ்சிநான் வாழவேண்டும்!
கண்ணகி:
என்கொழுநன் சென்றதெங்கே?
அவனுக்கு நான்
மிஞ்சிய சோறு போலானேனா?
மணவறையுள் அவனோடு நான் கைகோத்து நின்றகாட்சி என்சிந்தனையுள்
விஞ்சி நிற்கிறதே!
என்காற்சிலம்பே!
உன்னைக் கெஞ்சுகிறேன்!ஒலிக்காதே!என்தலைவன் கேட்காத உன்னோசையைக் கேட்க என்னால் முடியவில்லை!
இனி மிஞ்சிய காலமெல்லாம் இவ்வாறே போய்விடுமா?இல்லை இல்லை
நிச்சயம் ஒருநாள்
மணவாளன் வருவான்!அப்போது
இடியோசையை விஞ்சி நீ உன்னோசையை உருவாக்கு சிலம்பே!அதுவரை அமைதியை உன்னோடு கோத்துக் கொள் என்னைப்போல்!
த.ஹேமாவதி
கோளூர்